நினைவு வெள்ளம்

நினைவு வெள்ளம்

பாதமாய் நீயிருக்க
பலவழிகள் சுற்றிடுவேன்
பாவி நான் உனையே
பற்றியிருப்பேன்
பற்றியே இருந்தாலும்
விலகி நின்று ரசித்திருப்பேன்
விலகியே நின்றாலும்
விதியாய் தொடர்ந்திடுவேன்
விதியாய் தொடர்ந்தாலும்
பாதியில் பாதையில் நின்றிடுவேன்
பாதியில் நின்றாலும்
மைல் கல்லாய் நீ
கடந்த தூரம் சொல்வேன்.
கடந்த தூரம் சொல்ல நின்றாலும் இனி
கடக்கும் தூரத்திற்கும் ஓர் துணையாய்
பாதையோரக் கால்வாயாய் வருவேன்
கால்வாயாய் கனிந்து நான் வந்தாலும்
கடல் கலக்காத குட்டையாய்
சட்டென வற்றிடுவேன்
உன் பயணம் நின்றதும்!
பேசாத துணையாய்
உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளாத
துணையாய் ஊமையாய்
காலத்திற்கும் பேசுவேன்
பகிர்ந்திருப்பேன் !

எழுதியவர் : நேத்ரா (6-Apr-14, 2:38 pm)
Tanglish : ninaivu vellam
பார்வை : 128

மேலே