எப்பொழுது நீ வருவாய் எனது மணவாளனே
எங்கே
என் மணவாளா?/
என்று வருவாய்
எனை மணம் கொள்ள ?/
உருகி வேண்டுகின்றனர்
என் பெற்றோர்
தினமும்
இறைவனிடம் .
உன் வருகைக்காய்.......
தேடி அலைகின்றனர்
உந்தன்
உறைவிடத்தை
என்னை
ஒப்படைக்க
உன்
கையில்
நிரந்தரமாய் ............
வருவது நீ
இன்றோ ?/
என்றோ ?/
உன் உறைவிடம்
தூணோ ?/
துரும்போ ?/
விரைவில் வா
எங்கிருந்தாலும்
காத்திருக்கிறேன்
கண்ணாளனே
கரம் பற்ற
உந்தன் ....
உற்றாரும்
உறவினரும்
ஊர்வலமாய்
பவனி வர
ஒப்புக்கு
எனை
பார்த்து
பலகார
பட்சணங்கள்
புசித்து
குளிர்ப்பானம்
ரசித்துக்
குடித்து
தகவலனுப்புவதாய்
தயங்காமல்
கூறும்
உன் பெற்றோருக்கு
சளைக்காமல்
சப்பு கொட்டி
பதிலுக்காய்
எனை
ஏங்க
வைக்க
எப்போது
நீ வருவாய்
எனது
மணவாளனே ..........?/
காத்திருந்து
உன் பதிலுக்காய்
காயம்
பட்டு
பலனின்றி
பரிதவித்து
பதில்
வேண்டி
உன் வாசல் தனை
நாடி வர
என் வீட்டார்......
உன் தொழிலும்
உன் படிப்பும்
உன் அருமை
உன் பெருமை
பலனையெல்லாம்
பலநூறு
கதையாக
பலவாராய்
எமக்குரைத்து
சீதனத்து
சில்லறையின்
பெறுமதியை
உன் வீட்டார்
கூட்டி விட
எப்பொழுது
நீ வருவாய்
எனது
மணவாளனே ............ ?/
சீதனமே
முதற் கண்ணாய்
காசு பணம்
முதலிடமாய்
கேட்டதெல்லாம்
கேட்டுவிட்டு
வாழ்க்கை
தந்த
வள்ளல் போல்
வாய்க் கிழிய
வாய் புளுகு
வசனங்கள்
பேசிடவே
எப்பொழுது
நீ வருவாய்
எனது
மணவாளனே .............?/
ரொக்கமாய்
சீதனத்தை
உனக்கு
படியளந்த பின்னே
என் பின்னே
வாழ்க்கைப் பட
வரிசையில்
காத்திருக்கும்
என் உடன் பிறந்த
உயிர்களுக்கு
பசித்திருந்து
பக்குவமாய்
பதுக்கி வைத்திருக்கும்
பணத்தையும்
கல்யாணச் செலவென்று
கரையானாய்
நீ அரித்து
உன் உற்றாரின்
வாய் ருசிக்கு
வாய்க்கரிசி
போட
எப்பொழுது
நீ வருவாய்
எனது மணவாளனே ....?/
இன் முகமாய்
உருகிடவும்
கைபிடித்த
ஒருவருடம்
இன்பத் தேன்
பருகிடவும்
கரம் பிடித்த
சிலவருடம்
வன் முகமாய்
மாறிடவும்
காலம் சில
கரைந்த பின்னர்
இடத்திற்கும்
வசதிக்கும்
காலத்திற்கும்
ஏற்றாப் போல்
பன் முகனாய்
நீ மாறி
என் சுய முகத்தை
உன் முகத்தில்
கலைந்து
தொலைப்பதற்கு
எப்பொழுது
நீ வருவாய்
எனது மணவாளனே ..........?/
கண்விழித்து
இரவெல்லாம்
கண்ணியமாய்
கல்விகற்று
தொழிலுக்கு
நான் செல்ல
கண்
கண்ட
கனவெல்லாம்
ஆண் ஆதிக்க
வீம்பினால்
அடுப்பங்கரை
கரைத்துவிட
எப்பொழுது நீ வருவாய்
எனது மணவாளனே ........?/
என்
இளமை தனை
ஈடாக்கி
ஈருயிரும்
ஓருயிராய்
உன்னோடு
மெய் சேர்ந்து
ஈன்றெடுத்த
நம் சிசுவை
நீ மட்டும்
தனியாக
பெற்றெடுத்த
தோரணையில்
உன் உரிமை
வாரிசென்று
வெட்டியாய்
பெருமை
பேச
எப்பொழுது
நீ வருவாய்
எனது மணவாளனே ....?/
அண்ணனாய்
தம்பியாய்
ஆருயிர்த் தோழனாய்
சிரித்தாலும் கதைத்தாலும்
பிற ஆண்களுடன்
முற்றத்து
நிலவை
உற்றுப்
பார்த்தாலும்
நிலவுக்கும்
எனக்கும்
எவனோ ஒருவனுக்கும்
தொடர்பு உள்ளதாய்
ஊனக் கண்கொண்டு
சந்தேகக் கண்ணாய்
என் தேகம்
எரித்து
எட்ட இருந்து
ரசித்து
குளிர் காய்ந்து
களிக்க
எப்பொழுது
நீ வருவாய்
எனது மணவாளனே ..........?/
அலுவலகம் முடிந்து வரும்
உன் அருகாமைக்கு
வீட்டில் நான்
பூத்திருக்க
வீடடையாமல்
நீ
உன்
சபல நாயகியை
சந்தித்து வந்து
அதை தெரிந்து கொண்ட
என் மனதை
ஆண்மை குரலுயர்த்தி
அதிகார தொனியுயர்த்தி
உன் தவறை
சரியென்று
சத்தமிட்டே
சாதிக்க
எப்பொழுது நீ வருவாய்
எனது மணவாளனே ......?/
குழந்தைகளும்
நானும்
குடிலில்
தனித்திருக்க
கும்மாளம்
நீ போட்டு
குடித்து
வெறித்து வர
அன்பாக
அரவணைத்து
அறிவுரை கூற
ஆண் வர்க்கத்து
கர்வத்தில்
அடிகளையும்
உதைகளையும்
எனக்கு
பரிசாக்க
எப்பொழுது வருவாய்
எனது மணவாளனே .......?/
எங்கேயோ பிறந்து
எங்கேயோ வளந்து
உனக்காக வாழும்
என் மென் மனதை
மறந்துவிட்டு
காலமெல்லாம்
நிரந்தரமாய்
காரணமே
இல்லாமல்
என் குடும்பத்தை
குறைக் கூறி
கொடு சொல்லால்
குத்திக் காட்டி
கண்ணீரை வரவழைக்க
எப்பொழுது
நீ வருவாய்
எனது மணவாளனே ....?/