இரு சூரியன்கள் சந்தித்துக்கொண்டால்3-வித்யா
ஆம் விழி விரிய நோக்கினாள்.....!!!
உயரழுத்தத்தில் கொதிக்கும்
உலையென
கடலலை கொதிக்க......
கடற்பூ பறிக்க வந்த
வானவன்
தவறி விழுந்துதவித்தபோது
மடிதாங்கிய மாது...
விழி விரிய நோக்கினாள்.......!
அவள் தந்த ஜெல்லிமீன்களின்
இதழ்கடித்து தாகம் தீர்த்து
கொண்டதந்த உப்புக்கடலில்
சங்கமித்துக்கொண்ட
சூரிய நதி..........!
மடிதாங்கியவள் கண்ணயர்ந்ததும்
மாயனவன்
விண்ணுலகில் குடிபெயர்ந்தான்......!
துயில் களைந்து விழிதிறந்த
பேதையவள்....தொலைத்த
இதயம் வேண்டி வானவனுக்கு
வலைவிரித்தாள்..........!
நத்தைகொம்பில் கண்வைத்து
அலைகிழித்து நோக்குற்றாள்
நாளுமவள்........
மீன் வரவில்
ஒற்றைக்காலில் தவமிருக்கும்
கொக்கு போல்........!
-3தொடரும்
****************************************************************************
இரு சூரியன்கள்
சந்தித்துக்கொண்டால்
இரு பிரபஞ்சங்கள்
சங்கமித்துக்கொள்ளும்-வித்யா
கதாநாயகன்-கழுகு
கதாநாயகி-டால்பின்