குரு வணக்கம்

1.தத்பததில் தித்திக்கும் குருதத்தருமனவரே
தத்தாக்கிட தித்தித்திடும் தத்நாமம்
தித்திப்பாய் தந்தவரே வணங்குகிறேனே.....
****************************************************************************
பொருள்
1.தத்பதம் என்பது தத்துவமசி என்ற வேத வாக்கியத்தை குறிக்கும் :
தத் --அது ,துவம் -உன்னில் --அசி -அடக்கம்,
அது உன்னில் அடக்கம் என்று பொருள் அதாவது பிரம்மம் உன்னில் அடக்கம் என்று பொருள் இப் பதமே இந்து தத்துவம் தத்பதம் என விளக்கும்.
2.தத் பதத்தில் (தத் என்பது பிரம்மம் ) தித்திக்கும் குருவே குரு ததத்ரெயரும் ஆனவரே
3.ஜீவர்களை இறைநிலை ஆக்கிட (தாத்தாக்கிட ) தித்திடும் நாமம் தந்தவரே (தத்நாமம் -சிவன் விஷ்ணு என அனைத்தும் பிரம்மம் ) வணங்குறேன.
4.இந்து தர்மத்தில் இறை நாம ஜெபத்தால் இறை நிலை அடையலாம் என்ற வழி ஆதி குரு பரம்பரை முதல் தற்போது வரை பின்பற்ற படுகிறது.இறை நாமம் என்பது ஓம் நமசிவாயா,ஓம் நமோ நாராயணாய,ராம ராம, என்பது போன்றவை.
5.பி.கு :இது என் முயற்சி தவறு இருப்பின் மன்னிக்க

எழுதியவர் : குரு வருள் கவி (8-Apr-14, 2:08 pm)
Tanglish : guru vaNakkam
பார்வை : 368

மேலே