பெண் சிசுவின் ஏக்கம்

அம்மா...
உன் கருவில் விதையானேன்
உருவில் நீயானேன்
உதிரம் பருகி
உன் உணர்வில் வளர்ந்தேன்!

மேல் மூச்சு நீயாக
உள்மூச்சு நானாக
உருவம் நான் பெற
தினம் தினம்...
பிரம்மனிடம் போராடி

ஒவ்வொன்றாய்
உறுப்பு முளைக்க
உள்ளம் குளிர்ந்தாய் நீ
எச்சில் நீ விழுங்கி
என்னை நனைத்தாய் அம்மா...

கருவில் உருவான போது
நீ அடைந்த
ஆனந்தத்திற்கு அளவேதம்மா!!
அன்றும் இன்றும் நீ எனக்காக...
பல துன்பம் அடைந்தாய் அம்மா!!

இருட்டு குடத்தில் ஏதும் அறியாது
சுழன்று சுழன்று
உன்வயிற்றில் உதைதேனம்மா!!
பணிகுடமுடைத்து வெளிச்சத்தை
காணத் துடிதேனம்மா!!?

அமிர்தத்தை புசிக்க நினைதேனம்மா!
உன் அரவணைப்பில்
உடல் சூடேற்றி மார்போடெனை
நீ அணைக்கையில்...
அடையும் ஆனந்ததிற்கு அளவேதம்மா!!

ஆசையாய்...
நானும் காத்திருக்க
அந்த நாளும் வந்திட...

உன் வயிறு துள்ளி குதித்திட
நான் முட்டி மோதிட
உன் உயிரை ரணமாக்குவதரியாமல்!
வலியால் நீயும் துடித்துடிக்க... பணிக்குடமுடைத்து
வந்தே விழுந்தேன் உன்மடியில்...

வாரி நீ மார்பிலனைக்க
அந்த நொடி ...
என்தலையில் விழுந்தது இடி?!!
பெண்ணாய் நானும் பிறந்தேனென்று கண்திறக்குமுன்னே நீ வெறுக்க
என்ன பாவம் நான் செய்தேன் அம்மா..!!

படைத்த பிரம்மன் எல்லாம் செய்ய
ஏதும் அறியா எனை வெறுப்பது முறையா? அமிர்தம் பருகவும்
உன் அணைப்பில் கிடக்கவும்
துடிதேனம்மா...

அத்தனை சந்தோசத்தையும் மொத்தமாய் நீ தொலைத்ததுபோல் முகம் திருப்பிட
நான் கண்டு விம்மி அழுதேனம்மா!!
இதற்கா தவமிருந்தேன்?
துடியாய் நான் துடித்தேன்!!

வெறுத்தேன் மனமம்மா...
என் ஆசைகள் அடியோடு மறைந்ததம்மா!!
லோலாக்கு கிழவி எனைதூக்கிட
ஏதுமறியா புன்முறுவல் நான் செய்ய நெல்மணியை என் வாயில் திணித்திட
முச்சுத் திணறத் திணற
கள்ளிபாலுட்டி என்கதையை முடித்தாளம்மா...!

எண்ணக் கனவடி...
என் ஏக்கம் படும் பாட்டை அறிந்தவர் யாரடி? ஆறறிவா? உனக்கு...
அம்ம்மா அம்ம்மா அம்மம்மா ...

நான் செய்த தவறைக் கூறடி!
கருவிலே அழித்திருந்தால்
பிரிவு துயர் இல்லையடி!
உரு கொடுத்து உயிர் கொடுத்து
உணர்வைத் தூண்டி
கண்விழிக்கையில்
கல்லறையனுப்பியதேனடி!!?

தவமாய் தவமிருந்து
மனிதர்கள் காத்திருக்க
உன்கருவில் விதையாய்
விழுந்தது யார் தவறடி?!!
அம்மா அம்மா அம்மம்மா .....அ..ம் ..மா ....

எழுதியவர் : கனகரத்தினம் (8-Apr-14, 11:45 pm)
Tanglish : pen sisuvin aekkam
பார்வை : 128

மேலே