தேடலைத் தேடி
தேடுகிறேன்
என்
தேடலை
தேடல்
தேடித்
தொலைவது
வாடிக்கை
தேடலையே
தேடித்
தொலைவது
வேடிக்கை
தேடல் எதுவென்று
தெரியாத
எனக்கு
கண்டதெல்லாம்
தேடல்
காண்பவைகளோடு
எல்லாம்
ஊடல்
கை
தொட்டதெல்லாம்
கூடல்
தேடு என்கிறது
மனம்
எதைத் தேடுவது?/
என்கிறது உடல்
இரு முரண்களுக்கு
இடையில்
இறப்பை
நோக்கி
ஓடும்
என் வயதோடு
ஓடுகிறேன்
நானும்
தேடி
என்
தேடலை ...