நோயோடு உறவாடி
.... """ நோயோடு உறவாடி ""...
பசித்தபின்னே புசி புசிப்பதை
ருசித்து புசி நொருங்க தின்ன
நூருவயதென்ற பலமொழிகள்
ஓடி உழைக்க ஓங்க பசிக்கும்
ஒருபிடி சோறில் வயிறோடு
மனமும் சேர்ந்தே நிறையும்
உடலுழைப்பு இருந்தவரை
உணவே மருந்தாய் இருந்தது
இருந்துகொண்டு உழைத்துவர
மருந்தே உணவாய்போனது
வயிற்ருக்கு உழைத்தவரை
வந்ததில்லை நோயின்தொல்லை
வசதிக்காய் வாழும்போது இன்று
வாசல்தோறும் நோயேயெல்லை
உறங்கும் காலம் சுருங்கிவிட
உழைக்கும் நேரம் மிகுதிபெற
இருந்த இருக்கையிலேயே
புது புது உணவுகளை உண்டே
உடல் பெருத்து உருக்குலைந்து
துரிதமான சுழற்ச்சி வேகத்தில்
பாதை மாறிய வாழ்க்கை பயணம்
நோயுடனே தன் கைகோர்த்தது,,,
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.