என் அன்பே அன்பே

என் அன்பே அன்பே....
என் அன்பே அன்பே....
கார் மேகமாகியே
பூமழை தூவினாய்
விழி சிந்தும் நீரையே
விரல்கொண்டு நீக்கினாய்!!!

நீக்கினாய்...நீக்கினாய்...
நீக்கினாய்...நீக்கினாய்...

என் அன்பே அன்பே....
என் அன்பே அன்பே....
என் தேசம் யாவிலும்
நிலவும் நீ அருணன் நீ
சுடர்விடும் ஒளியும் நீ
என் இருள் போக்கினாய்!!!

போக்கினாய்...போக்கினாய்...
போக்கினாய்...போக்கினாய்...

என் அன்பே அன்பே....
என் அன்பே அன்பே....
இடரது எனை வீழ்த்த
நான் சாய்ந்த வேளையில்
ஓடியே நீ வந்து
தோள் தந்து தாங்கினாய்!!!

தாங்கினாய்...தாங்கினாய்...
தாங்கினாய்...தாங்கினாய்...

என் அன்பே அன்பே....
என் அன்பே அன்பே....
துயரங்கள் சோகங்கள்
என்றான வேளையில்
அன்பான வார்த்தையில்
எனை நீயும் தேற்றினாய்!!!

தேற்றினாய்...தேற்றினாய்...
தேற்றினாய்...தேற்றினாய்...

என் அன்பே அன்பே....
என் அன்பே அன்பே....
என் தோட்டம் யாவிலும்
உன் முகப் பூக்களே
நேசமும் வாசமும்
எங்கெங்கும் வீசுதே!!!

வீசுதே.. வீசுதே..
வீசுதே.. வீசுதே..

என் அன்பே அன்பே....
என் அன்பே அன்பே....
என் துன்பம் ஏந்திடும்
சுமைதாங்கி ஆகினாய்
சிரம் தாழ்த்தி கரம்குவித்து
சொல்கிறேன் நன்றிகள்!!!

நன்றிகள்... நன்றிகள்...
நன்றிகள்... நன்றிகள்...

எழுதியவர் : சொ. சாந்தி (10-Apr-14, 8:03 am)
Tanglish : en annpae annpae
பார்வை : 171

மேலே