ஒரு வேண்டுகோள் கவிதை

ஒரு வேண்டுகோள் கவிதை
----------------------------------------



என் அருமை எழுத்து.காம் கவிஞர்களே

இதோ ஒரு வேண்டுகோள்

பலவித தலைப்பில் கவிதைகள் தரும் நாம்

சிறுவருக்கோ பாப்பாவிற்கோ

கவிதை புனைவிதில்லை ஏன்

இன்றைய இச்சிறுவர்கள்

நாளை நம் வாரிசுகள்

நம் நாட்டின் வாரிசுகள்

நாட்டையும் வீட்டையும்

நலமுடன் பேணி காக்க

இன்றே இவர்களை

நாம் வழினடத்த வேண்டாமா

நாம் கற்ற நல்லவைகள்

இவர்களும் அறிந்திட வேண்டாமா

நம் நாடு, நமது மொழி கலாசாரம்

இவைகள் அழியாமல்

காக்கப்பட வேண்டாமா


இன்றே தயார்படுத்துவோம்

இன்றே கவிதைகள் புனைவோம்

நம் சிறுவர்க்கும் பிள்ளைகளுக்கும்

கவிதைகள் மூலம்

நல்லவை சொல்வோம்

வாரீர் வாரீர் நண்பர்களே

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (10-Apr-14, 4:44 pm)
பார்வை : 189

மேலே