ரங்கநாதன் கவிதைகள் - வேதம்

போடா போடா மனுசா
பிறப்பதும் இறப்பதும் புதுசா
சாகப் பிறந்த மனுசா - நீ
சாதித்தது என்னடா பெரிசா

மழை நீர் உறங்கிடும் ஓடாய்
மணிமுடி சூடிய தலைகள்
புழுக்கள் மேய்ந்திடும் காடாய்
பொன்னகை சூடிய மேனி
மாறியச் சேதியைக் கேட்டும் - மனம்
மாறவும் மறந்தாய் மனுசா
அடியற்றக் கடல் மேல் ஆடும் - உன்
அனந்த நடனம் தகுமோ
மாறும் மனதினில் நிலையாய் - நீ
மாறாதிருப்பதும் தகுமோ
ஆடை உடுத்திய விலங்காய் - அதை
அறியவும் மறந்தாய் மனுசா

எடுபடி எசமான் பேதம் - அது
திருடர்கள் ஓதிய வேதம்
பெருங்காடாய் இருந்தது நாடு - அதில்
விலங்காய் அலைந்தவன் மனிதன்
ஏய்த்தவன் எசமான் ஆனான்
ஏன் இதை மறந்தாய் மனுசா
............... போடா போடா மனுசா

கவிஞர் நரியனுர் ரங்கு
செல் : 9442090468

எழுதியவர் : நரியனுர் ரங்கு (10-Apr-14, 6:36 pm)
பார்வை : 99

மேலே