சித்திரையே வருக
செங்காந்தல் மலர் சூடி
செந்தமிழை கையில் ஏந்தி
செந்தூரப் போட்டு வைத்து
சிரித்து வரும் சித்திரைப் பெண்ணே !
அத்தை மகள் என்ன உனக்கு சக்களத்தியா ?
இத் தரையில் தமிழர் திருநாளுக்கு
சண்டை போட்டுக் கொள்ள ....?
சூரியக் காதலனை சூட்சமாய் சூடேற்றி
எங்கள் நித்திரையை கலைத்த
சித்திரைப் பெண்ணே .......! நீ
வெப்பக் குழந்தையை பெற்றுக் கொண்டது
போதும் - கொஞ்சம் புன்னகையை
தென்றலாய் வீசி விட்டுப் போ...........!
சித்திரைப் பெண்ணே ..! சித்திரைப் பெண்ணே ..!
விதைக்கப் பட்ட தமிழர் வீரம் அரசியல்
சூட்டில் வெந்து போகாமல் இருக்க வேண்டும்
விடுதலைப் போரில் நொந்துப் போன
தமிழர் நெஞ்சில் தன்னம்பிக்கை பெருக வேண்டும்
பெரியாரின் கருத்துக்களும் பேரறிஞர் சிந்தனைகளும் - பாரதியின் பகுத்தறிவும்
பாவேந்தரின் தமிழ் உணர்வும்
தமிழ் மண்ணில் தடம் பதிக்க வேண்டும்
புத்தன் வாழ்ந்த மண்ணில்
புதைக்கப் பட்ட புதை குழியில்
தோண்ட தோண்ட வெளி வரும்
மனித எலும்புக் கூடுகல் - மனிதத்தின்
கழுத்தை அறுத்து இரத்தம் குடித்த - புனித
புத்தன் வாழும் தேசத்தில் மனித நேயம்
மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் ...!
அதற்காய் சித்திரைப் பெண்ணே ....!
சித்திரைப் பெண்ணே ....! செங்காந்தல்
மலர் சூடி சிரித்து வரும் சித்திரைப் பெண்ணே
இத்தரைக்கு வருக ...!
உன் இன்பமெல்லாம் தருக .....!
l