மந்தை ஆடுகள்

நீ ஆட்டு மந்தை கூட்டம் என்று நான் அறிவேன்
உன் அறிவில் திருத்தம் செய்ய நான் வருவேன்.
உன் அடிப்படையை உனக்கு கற்று தருவேன்
உன் அப்பன் பாட்டன் தொழில் என்ன?
கேட்டு வைப்பேன்.
இடஒதுக்கீடே நீ இவ்விடம் அமர காரணம்
அறிவாயா நீ?
உன் அடிமை தனத்தை அவிழ்த்தது யார்?
தெரியுமா உனக்கு.
"ஆமாம் சாமி' போட்டு கொண்டிருந்த கூட்டம்
இன்று வாழ வைத்தவர்களையே வசை பாடுகிறது.
"முட்டாள்களின் அறிவுக்கான கழகம் " செய்த புரட்சி
நிந்திப்பு செய்யும் அளவுள்ள உன் வளர்ச்சி.
இருக்கும் இடத்தை எண்ணி பார்!
பழமை மறக்காதே!தவறை திணிக்காதே!!
நயவன்ஞகம் யாம் அறியோம்
நன்றி மறவாதே நீ!
கள(ல)ங்கம் பிறப்பிக்க காரணம் என்ன?
தெளிவு வந்துவிடும் என்ற அச்சமா உனக்கு?
கருஞ்சட்டை பார்த்து பயம் ஏன் உனக்கு ?
அது உன் அழமனதில் உள்ள அழுக்கு_ஏனெனில்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
என் கேள்விக்கெல்லாம் உன்னிடம் பதில் கிடையாது.
யாம் மதம் வெறுத்தவர்கள் தாம்
'மதம்' பிடித்தவர்கள் அல்ல.
நீ மாறாமலே மூடனாய் மாய்ந்துவிட்டு போ
எனக்கோர் நஷ்டம் இல்லை.
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு-நீ
திராவிடம் வாழ, வழிவிட பழகு!
'கருப்பு ஆடுகள்' கவிதைக்கும்,கருத்துரைத்தொர்கும் என் சமர்ப்பணம்.