தமிழ் மாதத்தினால் நர்மணனங்கள் மலரட்டும்
'' தமிழ் மாதத்தினால் நர்ம(ண)னங்கள் மலரட்டும் ''
'' சித்திரை , முளைத்து இனிமையாய் ,
முத்திரை பதிக்க மனிதனுள் சக்தி பிறக்கட்டும் //
'' வைகாசி , முளைத்து மனிதன் இன்னமும் ,
பரதேசியாய் திரியும் அடிமை தனம் ஒழியட்டும் //
'' ஆணி , முளைத்து நம் நாட்டினை ,
பேணி காக்க இந்திய இரானுவம் வளரட்டும் //
'' ஆடி , முளைத்து ஆணவம் வளர்த்துக்கொண்ட ,
சிலரின் அடாவடிகள் ஒழியட்டும் //
'' ஆவணி , முளைத்து ஆண், பெண் ,போக பேடு என்ற ,
அரவாணியையும் சிறக்க சீற்வகுக்கட்டும் //
'' புரட்டாசி , முளைத்து நம் மக்கள் ,
இருட்டாச்சிக்கு துணை போகாமலிருக்கட்டும் //
'' ஐப்பசி , முளைத்து நாம் அன்றாடும் பேசும் ,
கைப்பேசியின் வாயிலை குறைக்கட்டும் //
'' கார்த்திகை ,முளைத்து நம் இளையவர்களின் ,
சேற்க்கைகள் நலமாய் அமயட்டும் //
'' மார்கழி , முளைத்து அரசியலில் நம் தேசம் ,
நல்வழி செல்லட்டும் //
'' தை , முளைத்து உலவனின் திருநாளை நம் ,
கை கோர்த்து வளரவைக்கட்டும் //
'' மாசி , முளைத்து நம் சட்டத்தில் உள்ள ,
தூசிகளை மனிதன் தூர்வாரட்டும் //
'' பங்குனி , முளைத்து வேண்டுதளின் பெயரால் தன் ,
அங்கங்களை காயப்படுத்தி கொள்பவனுக்கு ,
பகுத்தறிவு வளரட்டும் //
'' எனது நித்திரையை ஒதுக்கி சித்திரைக்காக படைத்த ,
முத்திரை - அன்புடன் சிவகவி ,,,