வளர்பிறை வாழ்வு - மணியன்

மலர்களின் வாசமறியா
மண்ணுள் புதையுண்ட வேர்கள்
மரபு பிசகாமல்
மண்வாசனையே மனதில் களிக்கும் . . . .

கோடரியில் வெட்டுறும்
மரம் அழாது . . .
வேர் இருக்க
வேறொரு கிளை பரப்பும் . . . .

தழும்புகளைத்
தடவிப் பார்த்து
தளர்ச்சி நீக்கும் . . .
தன்மீது வீழ்ந்த அடி
தன்னை மெருகூட்டவே . . .

அன்னார்ந்து பார்க்கையில்
ஆகாய விண்மீன்கள்
அழகாய்த்தான் தோன்றும் .
அருகாமையில் தவமிருக்கும்
அரும்புகளையும் நுகரு. . .

விட்டிலுக்காக மட்டுமா
விளக்கு எரிகிறது . . .
கிழக்கு வெளுப்பதும்
புது விடியலுக்காகவே . . . . . .

நேர்மைக் குடத்தில்
நெஞ்சம் ததும்புமா . . .
நெருப்பில் சுட்டும்
நல்ல தங்கம் கருக்குமா . . . . . .

ஊழ்வினை என்று
உலகினில் ஏது . . .
உன் வினையன்றி எதும்
உனைக் காவாது. . . . . . . .

நடக்கின்ற வழியினில்
நெருஞ்சிகள் தொல்லை . . . .
நாளைக்கு வரலாம்
நல்பாதை காணலாமென
நல்லவனும் வல்லவனும்
நகைப்புக்கேனும் செய்யான் . . . . .

வாழ்வில் நெருக்கம்
வளர்ச்சியில் சுணக்கம்
வருந்தியும் வாழ்வதே
வாழ்வின் நியதி . . . . . . . .

வறுமை நினைத்து
வாழ்வில் தவித்திடின்
வளர்பிறை தன்னில்
வண்ண நிலவைக் காண் . . . . .

விழுபவன் எழுவதும்
அழுபவன் சிரிப்பதும்
அவனவன் மனதினில்
புதுவித உதயமாய்
அனுதினம் தொடர்ந்திடுமே . . . . .


*-*-*-* *-*-*-* *-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (11-Apr-14, 1:46 pm)
பார்வை : 379

மேலே