வேசமிட்ட நினைவுகள்

படிப்பை மறந்தேன்
பண்புகளை
காற்றில் பறக்க விட்டேன்
கூடா நட்பு
குடி கெடுத்தது..............!
தந்தை சொல்
தட்டினேன் துயரம்
அடைந்து தருதலையானேன்
தாயின் அன்பையும்
வெறுத்து..........!
வெட்டிக்கதைகள்
பேசினேன்
வேசமிட்டு ஆடி விசமியானேன்
வீணாக
கழிந்தது நாட்கள்.........!
பந்தபாசம்
தேடினேன் பாதைகள்மறந்து
பரிதவித்தேன்
பித்தனாக வேசமிட்ட
நினைவுகள்................!
நாடகத்தை
ரசித்தேன்
வாழ்வில் கடைபிடித்தேன்
கானல் நீரை
தேடியது வாழ்க்கை.........!