ஏனோ மழைப் பொய்த்துப் போனது

நீண்ட நாள் ஆகியும்
மழைப் பொய்த்துப் போனது!...

வெள்ளமல்ல, வெறும் துளிக்காகவே
மண் வறண்டும் வாழுது!...

மழை ஒளிந்துக் காட்டும் வித்தையென
இங்கே மண் தேடித்தேடி காத்திருக்க....

ஒரு மலர் மாலைக் காணக் கண்டு
அங்கே மழை முற்றிலும் கரைந்திருக்க...

வெயிலாக அது வாழ்ந்திருந்தால்
குயிலாகி இது அழைத்திருக்கும்....

மலராக இது பிறந்திருந்தால்
ஒரேநாளில் வாடி வதைந்திருக்கும்...

மண்ணாக படர்ந்து...
பசுமைகள் மறந்து....
வறண்டாகியும் விட்டது!....

இனியும் இங்கே மழை வருமோ?
வந்தாலும் இந்நிலம் தொடுமோ?
தொட்டாலும்.....! வெறும் அனல் தருமோ?
.
.
.
மெல்ல நகரும்,
இந்த விதியும் முடமோ?????........

எழுதியவர் : கவித்ரா (11-Apr-14, 7:08 pm)
பார்வை : 117

மேலே