உரையாடல்
மனதோடு பேசி
கரங்களில் காதலாய் பூத்தவளே
உன் ஸ்பரிசத்தில்
என்னை தூண்டி
கற்பனையில் நனைய வைத்தாய்
நனைந்த மாத்திரத்தில்
ஒரு கவிதையை யாசித்தாய்
மூச்சு முட்டி திணறிய நான்
உன் பெயரை எழுத
என்ன விந்தையோ?
ஒவ்வொரு எழுத்தும்
ஓராயிரம் கவிதையாய் மாறிவிட
வெட்கத்தில் நலிந்தாய்
பூரிப்பில் திகைதாய்
மலர்களோடு மோதி
காய்யபட்ட இதழ் அவிழ்த்து
சொல்லிவிட்டாய் - சீ போ என்று!