கவிதையே
பிரம்மனின்
பிறப்பு - இறப்பு பற்றிய
கணக்கு நோட்டில்
நீ மட்டும்
எப்படிக்
கவிதையானாய்
==============================
நீ
படிக்கத்
தெரியாதவனும்
படித்து ரசிக்கும்
கவிதை
==============================
கவிதை
பொய் என்பது
பொய்
உதாரணம் நீ
==============================
கவிதைத்தொகுப்பே
உனது
கண்காட்சிசாலைக்கான
முகவரி என்ன
==============================
முற்றுப் புள்ளிக்குப்
பின்தான்
இந்தக் கவிதை
தொடங்குகிறது
==============================
ஒரே
கவிதைக்கு
வெவ்வேறு நேரங்களில்
வெவ்வேறு அர்த்தங்களா ?
==============================
எழுதப்பட்ட
கவிதையொன்று
மழையில்
நனைகிறது
நன்றாக நனையட்டும்
அப்போதுதான்
நன்றாகப்
படிக்க முடியும்
==============================
கவிதைப்
புத்தகமே
நான் இன்னும்
உன்னை
மூடி வைத்தே
படித்துக்கொண்டிருக்கிறேன்
==============================
வளைவு
நெளிவு ......
இதில்
எது
எதுகை ?
எது
மோனை ?
==============================
நீ
சூடியிருக்கும் பூ
உனக்கான
அணிந்துரையா
==============================
கவிதை இதழே
உன்
ஆயுள் சந்தாவைச்
சொல்லிவிடு
நான் மட்டும்
உறுப்பினராகி விடுகிறேன்