+உன் ஒரு நொடி ஒரு நொடி கோபம் அழகு+

உன் ஒரு நொடி ஒரு நொடி
கோபம் அழகு
நீ மறு நொடி மறு நொடி
மறந்து பழகு

செவியோர‌ம் பறந்திடும்
வண்டாய் மனது
குறுகுறு குறுவென‌
ரிங்கார மிடுது
மனதுள் பனித்துளி
மெலிதாய் விழுது
உன்சிரிப் பொலிகேட்டே
சரியானது பழுது

உன் ஒரு நொடி ஒரு நொடி
கோபம் அழகு
நீ மறு நொடி மறு நொடி
மறந்து பழகு

உன்கோபத்தால் விளையும்
செல்ல அடிகள்
என்வாழ்க்கையில் கிடைத்த‌
நல்ல நொடிகள்
உன்முறைப்புடன் பிறக்கும்
சின்ன சிரிப்பு
எனைமயக்கிய காரணி
கொஞ்சும் மழைநீ

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Apr-14, 7:16 am)
பார்வை : 177

மேலே