நூலிழை

எங்கிருந்தோ
என் கையில் சிக்கியது
ஓர் நூலிழை.
வெயில் படும் நிழலிடங்களில்
மட்டுமே தெரிந்து
வேறிடங்களில்
எனைக் குருடாக்கியது.

தோற்றமும் தெரியாது
முடிவும் தெரியாது
நடுவில் எங்கோ ஓர் பகுதி
சிக்கிக் கொண்டிருக்கிறது
பாதி மட்டும் சிக்கிய
இதைக் கையில் ஏந்தி
மீதியும் புரியாது
அசையாது சிலைபோலே நான்.

நீயல்லவோ அந்த நூலிழை !

எழுதியவர் : நேத்ரா (12-Apr-14, 6:45 am)
Tanglish : noolilai
பார்வை : 89

மேலே