ஏக்கம்

ஏங்குகிறேன்….
தாய்மடி தவழ்ந்த்திட்ட
தருணம் நினைத்து
தினந்தினம் தலைவைத்து
உறங்கிட….
ஏங்குகிறேன்….
பல வண்ணம் மேவினும்
பகுப்பு மறந்து
ஒரு வானம் பறந்திடும்
பறவையாகிட….
ஏங்குகிறேன்….
தாகத்தில் தவித்தாலும்
தஞ்சம்டைந்தாருக்கும்
தண்மை வழங்கிடும்
தருவாகிட….