வாழ்க தமிழ்நாடு
அன்பாய் அரவணைக்கும் பூமி
அருளை வாரி வழங்கும் சாமி
இப்பொழுது உண்டா நீ காமி !!
மனிதா உன் மனம் புனிதா ?
செய்யும் செயல்கள் மற்றவர்க்கு இனிதா ?
சுயநலம் ஏன் உனக்கு மிகவும் பெரிதா ?
தூய்மையான சொற்களை பேசும் மக்கள் குறைய ..!
பசுமையின் வளர்ச்சி சிறிது சிறிதாய் சீர் குலைய..!
நாட்டின் கலாசாரம் கடைசியில் மறைய ..!
நம்முள் பொழுது கழிக்கும் அறிவியல் உண்டாக்கிய மோகங்கள் ஏராளம் நிறைய..!
எங்கே போகிறது ..நம் நாடு..!
நம் நாட்டினுள் எத்தனை வளங்கள் ..!
அதனை கொண்டு நம் மக்களுக்கு கொடுக்க முடியாதா வாழ்வு சிறக்க கூடிய பலன்கள்..!
தம்ழின் இலக்கியம் சுவைக்கும் இனிமை ..
தமிழர்களின்..
தமிழ் மன்னர்கள்..
நம் கடவுள்கள் செய்த அற்புதங்கள்
நம் நாட்டினுள் உள்ள அதிசயங்கள்
இப்பொழுதும் நாம் திரும்பி பார்த்தல்
அதிசய வைக்கிறது ...!
நல்லவைகளை நோக்கி தூய்மையை உள்ளடக்கி
தமிழர்களின் தனிச்சயான நம் அழகிய கலாச்சாரத்தால்
பக்தி..அதில் மிகுந்த ஈடுபாடு ..
ஆயுர்வேதம் ..அதில் மிகுந்த ஈடுபாடு
யோகா கலை ..அதில் மிகுந்த ஈடுபாடு
இவை அனைத்தும் உன் முயற்சியில் கூடு
பாரு சான்றோர்கள் ஆத்மாவின் மகிழ்ச்சியோடு
பிறக்கும் மீண்டும் அந்து தூய தமிழ்நாடு ....!