விடுதி வாழ்க்கை

பிறந்த வீட்டையும் பெற்றவர்
அன்பையும் தவிர வேறெதுவும்
அறியா மடல்கள் இன்று ............
வேற்று கிரகத்திற்குள்... விடுகதையாய்.....
பள்ளித் தோழமையின் பிரிவோடும்
பலக் கல்லூரிக் கனவோடும்
காலடி வைத்தோம் கல்லூரியில் ......
கரை இல்லாக் கனவுகளும்
கறை பட்டு போனது ........
அறை இல்லா ஆவல்களும்
அறை பட்டு போனது .....
முன் அறியா முகங்களும்
என் அறியா மொழிகளும்
கண் அறியா எண்ணங்களும்
ஓரறையில் ஒன்றாய் அடைக்கப்பட்டது .....
அடைக்கப்பட்டவை தான் தங்களை
அடைக்காக்குமென அறியவில்லை அன்று .....
அறியா முகங்கள் தான்
தங்களை அடைக்காக்கும் என
அறியவில்லை அன்று .......
அறியா முகங்கள் தான்
ஆண்டு கடந்து ஆயுள்வரை
அன்பு செய்யுமென அறியவில்லை
அன்று ......
அறிமுகத்திற்காக பரிதவித்தவர்கள்
இன்று அறையை விட்டகல
பரிதவிக்கின்றனர் ....
தோழிகளின் தொலைவிற்காக துடிக்கின்றனர் ...
ஒருவருக்கொருவர் ஆறுதல்களும்
ஓயாத வார்த்தைகளும்
விடப்பட்ட வார்த்தைகளும்
விடாத விளக்கங்களும்
வீண் பேச்சுகளும்
வெட்டி அரட்டைகளும்
கல்லூரி கதைகளும்
காதல் கிசுகிசுக்களும்
வாழ்வின் வசந்தங்களானது.....
படிக்கும் நேரத்தில் வானொலி
கேட்டு வார்டனிடம் திட்டு வாங்கியதும் ....
பரிச்சைக்கு முன்னே மட்டும்
பைத்தியம் பிடித்து பலமணிநேரம்
இருப்பது போல பதினைந்து
நிமிடத்தில் பதியம் செய்வதும்.....
யாருமறியாத போது
உணவகத்தில் உல்லாசமாக
ஐஸ்கிரீம் திருடுவதும் .....
திருட்டுத்தனமாக கேமேராவை
கேம்பஸில் கொண்டுவந்து
கொண்டாட்டமாக மற்றவர்
வயிற்றில் புகைவர புகைப்படம்
எடுப்பதும் ..........
ஒரேபுடவையை ஒன்பதுபேர் அணிந்து
ஒய்யாரமாக போஸ் கொடுத்ததும் ...
பந்திக்கு மட்டும் முந்தும்
படையாக இல்லாமல் படத்திற்கும்
முந்திச்சென்று முதலில் அமர்ந்ததும்.....
வார்டனை தொல்லை செய்து
தொலைக்காட்சி அறைசாவி . வாங்கியதும் ....
காயின்பாக்ஸ் அருகே கால்கடுக்க
நின்று கடைசியில் காலம்
முடிந்து கடுப்பாகி திரும்புவதும்
திரும்பவருமா??????????
நண்பர்களின் ,
நள்ளிரவு நடனங்களும்
நகைச்சுவை பேச்சுகளும்
பலதரப்பட்ட விசயங்களும்
பாலியல் பகிர்வுகளும்
எச்சில் உணவுகளும்
எட்டாக் கனவுகளும்
சிறுசிறு பிழைகளும்
பிழைகளால் ஏற்பட்ட பிரிவுகளும்
பிரிவுகளையும் பிளக்கசெய்த
பிறந்தநாள் கொண்டாட்டங்களும்
நான்கு வருடங்களோடு நடைசற்றுமோ ??????/
இல்லை நானூறு வருடங்களுக்கு புடைசூழுமோ ??
இந்த விடுகதைகள் விழிநீரோடு
விடைதெரியாமலே விடைபெறுகிறது
விடுதியைவிட்டு ......
இதுதான் விடுதி வாழ்கையா ????????????........

எழுதியவர் : குயில் (12-Apr-14, 10:38 pm)
Tanglish : viduthai vaazhkkai
பார்வை : 1278

மேலே