Thozhi
என் வாழ்வில் எனக்கென
முதன் முறையாய்
கிடைத்தாள் - ஒருவள்...
என் தோழியாய்...
என்சகாக்களுடன்
இருக்கும் நேரத்தை விட
அவளுடன் இருக்கும்
நேரமோ - மிகக்குறைவு
ஆனால்
நான் தனிமையில்
இருந்தால் நினைவில்
இருப்பவள் - அவள்...
அவளுடன் பழகக் கூடிய
நாட்கள் மிகை குறைவே - எனினும்...
என் இறுதி வரை தொடரும்
என் நட்பு...
அவளை பற்றி.....
ஈரைந்து மாதங்கள் - எனை கருவில் தாங்கி
என் தாய் கொடுத்த உயிரைப் போல
நீ கொடுத்த உறவு...
நிராதரவாய் சுற்றி திரிந்த எனக்கு
கிடைத்தாய்....
எல்லாமுமாய்... நீ
பசியில் இருந்தும்
என் பசியாற்ற நினைத்த போது
தாயாய்...
என்னுடல் நலனை
குறித்த போது
சகோதரியாய்..
குழப்பத்தில் இருத்த போது
நல்வழி காட்டும்
ஆசானாய்...
என்றும் எனை அறிந்து
நடக்கும் என்னுயிர் தோழியாய்...
சோதனைகளில் சாதனை படைக்க
சொல்லி கொடுத்தவள்...
வேதனை இருளை
வெற்றிக்கொள்ள
வெளிச்சம் கொடுத்தவள்...
வெற்றியின் பொது விலகி நின்று வாழ்த்து சொல்லி...
தோற்கும் பொது நெருங்கி வந்து தோள் கொடுத்தாள்....
உள்ள மலர்
உதிராமல் இருக்க...
ஊக்க நீர் ஊற்றும் உன்னை
கள்ளத்தனம்
கலக்காமல் இருப்பதால்...
காதல்கூட போற்றும்....
நஞ்சையும் அமுதாய் மாற்றும்
ஆற்றல் மிக்க நட்பே
உயிராய் நினைத்து
உண்மையாய் நேசித்து
போற்றத்தக்க நட்பே
நானிலம் உள்ள வரை
நலமுடன் வாழ்க நீ
மண்ணில் நட்பினம் வாழ்வதற்கே...