அன்பின் அரங்கேற்றம் - அவமதிக்க மட்டுமா --- இராஜ்குமார் ---

சாபம் எல்லாம்
சலங்கை கட்ட
துயரத்தின் அரங்கேற்றம்
வாழ்க்கை மேடையில்
தினம் தினம்
நானே கலைஞன்
நானே ரசிகன் - மன
கண்ணாடியில் ரசிக்கிறேன்
அனுபவத்தை அழகழகாய் ...!!
கனவின் காட்சிகளில்
அன்பின் அரங்கேற்றம் ..!
பணம் கொடுத்து
பார்த்த பார்வையாளர்களின்
கண்களில் கண்ணீர் ..!
கைக்குட்டை குளித்து
கேட்ட கேள்விகள் ..!
இதயத்தில் ஈரம் உண்டோ ?
இல்லத்தில் பாசம் உண்டோ ?
அன்பின் அரங்கேற்றம்
அழிவதை அறிந்தும்
அதை அவமதித்து
வாழும் மனிதனின்
இலக்கு என்னவோ ?
சாதனை என்னவோ ?
---- இராஜ்குமார்
==============================================
அன்பை மட்டும் அவமதிக்க வேண்டாம் மனிதா
==============================================