மிட்டாய் நாடகம்Mano Red

அப்படி என்ன இருக்கிறதோ
தெரியவில்லை...??
குழந்தைகளின் உலகில்
அம்மாவுக்கு அடுத்த இடம்
மிட்டாய்களுக்கு மட்டுமே...!!

அழுது அடம்பிடித்து,
பொய்யான கண்ணீருடன்,
உதடுகள் பிரியாமல்,
உம்மென்று மௌனமாக,
என அத்தனை நாடகங்களும்
அதிர்ஷ்டக்கார மிட்டாய்க்காக..!!

"மிட்டாய் வாங்கித் தருகிறேன்"
என்ற அம்மாவின் வார்த்தைக்கு
சேட்டைகள் குறைத்து
நல்ல பிள்ளையாக
அது வரை காணாத
அமைதியுடன் குழந்தைகள்...!!

மிட்டாய் கிடைக்குமென்ற
ஒரே ஒரு காரணம் போதும்,
அத்தனை பாசமான
பொம்மைகள் கூட
குழந்தைகளால் விற்கப்படும்...!!

மிட்டாய்களின் இதழில்
குழந்தைகளின் எச்சில்
சேரும் போது தான்
அந்த இனிப்புக்கு இன்னும்
இனிப்பு தித்திக்கும்..!!

குழந்தைகளின் முதல் காதல்
அதிர்ஷ்டம் செய்த மிட்டாய்க்கு மட்டுமே...!!

எழுதியவர் : மனோ ரெட் (13-Apr-14, 10:16 am)
பார்வை : 61

மேலே