ஒரு பெண்ணின் வேதனை

ஊன் சுகம் கான
உரசும் பிணங்கள் முன்னே
உயிரற்ற மரக்கட்டைகளாய்
உருண்டு தொடர்கிறது
எங்கள் பேருந்து பயணம்....
அலுவலக முதலாளிகளின்
அர்த்தம்ற்ற பார்வைக்கு
அனிச்சையாய் விலகி
அடிபணிந்து போகின்றது
எங்கள் வேலை பயணம்
விரட்டி வரும் ஆடவர்கள்
வீடுவரை பின் தொடர
வீண்சபலம் ஏற்படாது
விவேகத்துடன் வீடு செல்கின்றது
எங்கள் தன்மானப் பயணம்.
சலவை, சமையலில் குறைகண்டு
சண்டை போடுவது - கணவராயினும்,
அவர் உறவாயினும்
சமாதானம் படுத்தும் குழந்தைகளுடன்
சமரசமாய் செல்கிறது
எங்கள் வாழ்க்கை பயணம்.............
உணர்வின் பாதையில்....
மணிசந்திரன்