Enthanthai

பிறந்த பொழுதே எழுதி வைத்தான் - இறைவன்...
வளர்கின்ற பொழுது தந்தை கிடையாதென்று...
ஒவ்வொரு நாளும் ஏங்க வைக்கின்றான் - இறைவன்
தந்தையின் பாசத்திற்காக....
அனுதினமும் சாக வைக்கின்றான்...
தந்தையின் அன்புக்காக..
உதறிவிட்ட சொந்தங்களை எண்ணி வெறுக்கின்றேன் - உறவுகளை..

வடிக்கின்றேன் கண்ணீரை
வடிந்து விட்டது கண்ணீர் குளம்..
வெடிக்கின்றது மனது..
வடிகின்றது குருதி....
பெருகுகின்றது ஏக்கம்...

உன்னை கல்லில் செதுக்கியதால் உன் மனதும் கல்லானதோ ?

என் மனதின் பாரத்தை குறைக்க எந்தந்தையைப் போல் இனி ஒருவர் பிறப்பதற்கு இல்லை ... .
பிறக்கப் போவதும் இல்லை..
வற்றிய காவிரியும் நிறைந்திடும் ஒரு நாள்...
என் மனம் ???

தாய் மொழியால் மட்டுமல்ல...
வாய் மொழியாலும் விளக்க முடியவில்லையே...
சிந்தையை மட்டுமல்ல
என்னையும் கட்டுப்படுத்த முடியவில்லை...
தேடுகிறேன் தேடுகிறேன்
என்னுள் அமைதியை
என்னை சுற்றிலும் அமைதியை...

ஒருவருடைய வாழ்வில் ஆயிரம் மாற்றங்கள் இருந்தாலும்... அந்த ஆயிரத்தில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் ....
எத்தனையோ மாற்றங்களை கொடுத்துவிடுகிறது...

என்னுள் எனக்குள் இன்னும்.....

எழுதியவர் : (13-Apr-14, 11:59 am)
சேர்த்தது : Sivanandham
பார்வை : 71

மேலே