தமிழ் -----------சரோ

மெய்ப்படு பொருளே தமிழ்
மெய்யால் பாடுவோம் புகழ் !
ஊனில் உயிராய் நிறைந்தவளாம்
உலக பழமையில் சிறந்தவளாம் !

சீரும் சிறப்பும் பெற்ற மொழி
செம்மை நிறைந்த செம்மொழியாம் !
அன்னை தமிழே ! அழகு தமிழே
உன்னை என்றும் ஓதிடுவோமே !

சிந்தனை சிறப்பு தாய்மொழியே
சீரான பாதைகள் தாய்வழியே !
தாயும் தமிழும் இரு கண்கள்
தரணிக்கு சொல்லு வரும் பலன்கள் !

நற்றமிழை நாவால் மொழிந்திட பழகு
குற்றமில்லை என்றே கொள்கையால் சொல்லு
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழாய் வாழ்வதே எங்களுக்கு மேல் !

தளம் மணக்குது எங்கள் தமிழால்
தமிழ் சிறக்குது எங்கள் தளத்தால் !
தரமான கவிதை தமிழுக்கு அழகே
வரமாக படைப்போம் நாளும் மகிழ !!!

சரோ

எழுதியவர் : சரோ (13-Apr-14, 10:16 am)
பார்வை : 279

மேலே