தெலுங்கு சிறுவர் பாடல்

*
சிட்டுக்குருவி.
*
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
கோபம் என்னம்மா…
அம்மா திட்டினாளென
அழுது படுத்திருக்கா…?
*
தண்ணீரில் விளையாடினால்
சளி என்கிறாளா…அம்மா
மண்ணில் விளையாடினால்
புண்வரும் என்கிறாளா...
*
குரலெடுத்துப் பாடினால்
கத்தாதே என்கிறாளா…
பரணிலுள்ள பொம்மைகளை
எடுக்காதே என்கிறாளா…
*
வேகமாய் ஒடினால்….தடுக்கி
விழுவாய் என்கிறாளா…
குதித்து விளையாடினால்
கால் உடையும் என்கிறாளா….
*
சொன்னதைக் கேக்கலன்னா
சங்கதி தெரியும் என்கிறாளா….
பிடிக்கலன்னா கூட வாயில்
சோறு திணிக்கிறாளா…?
*
ஆதாரம் :- “ நட்சத்திரப் பூ “ என்ற நூல்
தெலுங்கு மொழி: கவிஞர். பூபால்
தமிழில்:- திருமதி. சாந்தாதத்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (13-Apr-14, 11:10 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 95

மேலே