===+++போடுற பொழப்பு+++===
போட்டோம் போட்டோம் போட்டோம்
கறிச்சோறு போட்டவனுக்கும்
கள்ளுக்குப்பி தெளிச்சவனுக்கும் போட்டோம்...
செலவுக்கு தந்தவனுக்கும்
சேலைவாங்கி குடுத்தவனுக்கும் போட்டோம்...
வெத்தலபாக்கு செலவுக்கும்
வெள்ளவேட்டி வேசத்துக்கும் போட்டோம்...
கையெடுத்து நின்னதுக்கும்
காலில்விழுந்து எழுந்ததுக்கும் போட்டோம்...
அப்பவும் போட்டோம்
இப்பவும் போடுறோம்
அப்புறமும் போடுவோம்,
ஐந்தாண்டுக்கொருமுறை
அசராம போடுவோம்...
போடுறதுதான்
எங்க பொழப்பு....
நாங்களும் மாத்திபோடுவதில்லை
அவர்களும் மாறப்போவதில்லை...!!!
-----------------நிலாசூரியன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
