இயந்திரப் பெண்

கடிகாரத்தின் ஒலியால் முடுக்கபட்டு
கண் விழித்ததும்

காலை முதல் இரவு வரை
பட்டியலிடப்பட்ட வேலைகள்

கண் முன் ஓட ...

கவலையை மறக்க
கண்ணீரை விழுங்கி

தண்ணீரை தலையில் விட்டு

சில்லென்ற மன அலையோடு
சிற்றெரும்பு போல் சுறுசுறுப்போடு

சிறந்த மனைவியாக தாயாக
சிதறாமல் பம்பரமாய் சுழன்று

காலையை கடந்து
சாலைக்கு வந்து
வேலைக்கு செல்லும் போது

கால்கள் துவள
மனம் அதை தாங்கி பிடிக்க

அலுவலகத்தில்
அதிகாரிகளை சமாளித்து

உடல் வலி மன வலிகளை
ரீ சைக்கிள் பின்னில் போட்டு

ரீ ஸ்டார்ட் செய்து
மாலையில் டர்ன் ஆப் செய்து

இரவில் .....

இதுவும் ஒரு வாழ்கைகையா என்ற வினா தோன்ற

இதுவும் கடந்து போகும் என
இனிய வார்த்தைகளால்

இனிதே ஊக்கப்படுத்தி

இது உடலா ? இல்லை
இயந்திரமா ? என்ற வினாவிற்கு

24 மணி நேரம் விடை தேடி

இயந்திர வாழ்க்கையை
தொலைக்காமல் தொடர்கின்றோம் .......

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (13-Apr-14, 6:32 pm)
பார்வை : 62

மேலே