வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 19

மொத்தம் ஒன்பது கவிதைகளை....இந்தத் தொகுப்பிற்கு "கவிஜி" அளித்துள்ளார்.

அவரின் இந்தத் தொகுப்பின் முதல் கவிதை...

"கருப்பொருள்".

படிப்பதற்கு ரொம்பவும் வித்தியாசமாய் இருந்தது
இந்தக் கவிதை. கருப் பொருள் இல்லாமல் ஒரு கவிதை எழுதத் தனக்குத் தோன்றிய சிந்தனையை
ஒரு கவிதையாகச் சொல்கிறார்...கவிஜி.

கருவே இல்லாமல் ஒரு கவிதை எழுத யோசிக்கையில்...கருவைக் குறித்து யோசிக்காமல் இருக்கத்...தேவையான எண்ணங்களை எழுதி வைக்க...தொலைந்துவிட்ட
அந்தத் தாள் "என்னைக் காணவில்லை" என்னும்
கருப் பொருள் தர...கவிஞரை யோசிக்க வைக்கிறது..."இனி யோசித்துத்தான் எழுத வேண்டும்" என.

ஒரு நவீனமான வெளிப்பாடு இந்தக் கவிதை.
கவிதைக்குக் கரு என்பது ஒரு "கட்டுப்பாடு" போல்
கவிஞருக்குத் தோன்றுகிறது. கட்டுக்களை உடைத்து எழுதுவதே கவிதை...என அவரின் இளைய மனம் சொல்ல...கருவற்ற கவிதை குறித்தான யோசனை...கவிஜிக்குத் தோன்றுகிறது.
நான் அவரின் அறிமுகப் பக்கத்தில் அவரைப் பற்றிய குறிப்பைப் பார்க்கையில்...அவர் எழுதி இருந்தார்.."எனக்குப் பறவை என்றும் பெயருண்டு" என..கட்டுபாடற்று...வானத்தில் தன் திசையில் பறக்கும் விருப்பம் கொண்டவருக்கு...கருப் பொருள் அற்று கவிதை எழுதுவதில் விருப்பம்
உண்டானதில் வியப்பு ஒன்றும் இல்லை.
பின் எழுத நேர்கையில்...அவரின் முதிர்ச்சி...
அவரை நேர் நிறுத்துகிறது...யோசித்துதான் எழுத வேண்டுமென.

வெகு இயல்பாய் நாம் கடந்து விடும் ...அல்லது நமக்குத் தோன்றவே தோன்றாத ஒரு விஷயத்தை
பெரும் முதிர்ச்சியோடு கவிதை ஆக்கி இருக்கிறார்
கவிஜி. எழுத மிகக் கடினமான் இந்தப் பொருளை...
ஒரு தேர்ச்சியான கவிதையாய் தந்திருக்கும்
கவிஜிக்கு வாழ்த்துக்கள் சொல்லி...

அவரின் அடுத்த கவிதை குறித்துச் சொல்லத் திரும்புவேன்...

காலத்தின் பெரும் துணையோடு.

எழுதியவர் : rameshalam (14-Apr-14, 4:35 pm)
பார்வை : 101

மேலே