இன்றைய விடியல்-வித்யா

இன்றைய விடியல்-வித்யா

பொதுவாகவே பாலைவனக்கனவுகள்
வந்துபோகும் என்னிரவுகளில்
வழக்கத்திற்கு மாறாக
வேகமாக எனை கடந்து போகும்
ஒரு பறவையின் நிழல்...
நிழல் உரசி உடைந்து
போனதொரு உயிர்....
உயிர் புதைத்த ஒரு
செங்காந்தள் மலர்....
அப்பூவில் தேன்திருடாத
ஒரு வண்ணத்து பூச்சி....
அதன் சிறகுதிர்ந்த
ஒரு தீவு......
தீவுக்குள் ஒளிந்துகொண்ட
ஒரு பாதாள குகை........
குகையை காட்டிக்கொடுத்த
ஒற்றை மெழுகுவர்த்தி.......!


இன்றைய புதிய விடியலில்
தென்றலின் கைபிடித்து சென்று
நான் கால் பதித்த என் லட்சிய சோலை........!


அனைவருக்கும்
என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......!

எழுதியவர் : வித்யா (14-Apr-14, 7:42 pm)
பார்வை : 181

மேலே