வயலும் வாழ்வும்
கருத்தவனெல்லாம்
கருமேகத்தை கண்டால்
சிரித்திடுவான் ஆனந்தமாய்
கண்ணில் நீர் வடிய ...
கதிர் அறுத்திட வேண்டி
சேற்றில் கால் பதித்து
பயிர் பறித்து நடவிட்டு
தினம் தொலைப்பான் நித்திரை
நீர் இறைத்து உரமிட்டு
இரு போகம் விளைவித்து
பாருக்கு வயிறார உணவிட்டு
வருந்தி நிற்பான் தன் பசியில்
மருந்தான உணவதுவை
மருந்தென விழுங்கிட
மற்றோர்க்கு தந்திடாமல்
குப்பையில் கிடத்திட
பொய்த்தது மழையும்
பறிபோனதோ வயலும்
பதராய் போனவன் உழவன்
பதறாத உன்மனதால்...