காதல்

உண்டிகோளில் கல் வைத்து எரிய துடித்திடும்
நரிக்குரவனின் பசி போன்றது காதல்

காற்று அடிக்கவே திசைகள் மாறி விழும் விதைகள் முளைக்க துடிக்கும் நிறமே காதல்

ஓடைகளில் நீர் ஓடிட மீன் துள்ளி குதிப்பதுபோல்
நெஞ்சம் துள்ளித் திரிவதும் காதல்

வட்டத்தில் திசை கருவி பெரியமுள்ளும் சிரியமுளும் சேரும் தருணமே காதல்

கல்லறையில் நானிருக்க
காகிதத்தில் நீ மலர
என் கை வரைந்திடும் உன் ஓவியமே காதல்

பட படவென தாக்கம்
வெட வெடவென வெட்கம்
குளு குளுவென தென்றல்
வீசும் போது என்னுள் நீ வருவதும் காதல்

கண்ணாடி முன்பு
கில்லாடி பாப்பா
தன்னாலே வருவது காதல்

துடி துடிவென துடிக்கும் இளமை
திகு திகுவென எரியும் விளக்கை
அனை அனைவென அனைக்கும் நீரோ காதல்


கரையில் காலடி
கடலடி ஓரத்தில்
படம் எடுக்கும் என் புழுவும்
படம் பார்க்கும் உன் இதழும்
மழையில் நனையவே
புது காதல் பிறந்திடும்
நேரமே காதல்.

இறந்த பின்பும் அழியாமல்
மனதில் நினைவுகள்
காயங்கள் தருவதும் காதல்

எழுதியவர் : நா இராஜராஜன் (15-Apr-14, 12:05 am)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : kaadhal
பார்வை : 88

மேலே