மொழி

மறந்தும் பேச
வார்த்தைகள் இல்லை!

திகைத்து நிற்கும் மனதை அசைக்கும்
உன் விழியசைவு!

சுதாரித்து பதில் அளிக்க
வார்த்தைகளை தேட வேண்டும்.

இமை மூடி நின்றவற்றையும்
பதிலென்று ஏற்று கொண்டாய்!

கருவிழிகளும் கதைக்கும் என்று
உன் விழிகளில் புரிந்து கொண்டேன்!

பேசி கொள்ள தயங்கவில்லை
யார் அருகில் இருந்தாலும்..
தொலைவும் சுகமாகி போனது!

விழியா இல்லை நீ அன்பிற்கும் காட்டிய வழியா !!

எழுதியவர் : மலர் (15-Apr-14, 6:59 pm)
சேர்த்தது : மலர்
Tanglish : mozhi
பார்வை : 82

மேலே