அவள் vs நான்

அவள் : கண்ணா, எனக்கொரு சந்தேகம்
நான் : மறுபடியுமா? சொல்லு கண்ணம்மா..!
அவள் : நான் இப்படி பண்ணுனா நீ என்னடா பண்ணுவ?
நான் : எப்படி பண்ணுனா ?
அவள் : நான் கோவமா இருந்தா?
நான் : நான் பாவமா இருப்பேன்.
அவள் : நான் சோகமா இருந்தா?
நான் : உன் தோளோடு சாய்ந்திருப்பேன்.
அவள் : நான் சிரிச்சிட்டு இருந்தா?
நான் : உன்னை ரசிச்சிட்டு இருப்பேன்.
அவள் : நான் மொரச்சிட்டு இருந்தா?
நான் : நான் முழிச்சிட்டு இருப்பேன்
அவள் : நான் அழுதுட்டு இருந்தா?
நான் : உன்னை அணைச்சிட்டு இருப்பேன்.
அவள் : நான் சமைச்சிட்டு இருந்தா?
நான் : நான் குறை சொல்லிட்டே இருப்பேன்.
அவள் : நான் உன் குமட்டுலயே குத்தினா?
நான் : காப்பாத்துங்க.. காப்பாத்துங்கன்னு கத்துவேன்
அவள் : காதலோடு உன் பக்கத்துல வந்தா?
நான் : நான் காமத்தோடு விலகி நிற்பேன்.
அவள் : நீயா? விலகி நிப்பியா? பாக்கலாமா பொறுக்கி?
நான் : அவ்வ்வ்வ்வ் ...
.
.
.
என்னாச்சி? எங்க அவ? அய்யய்யோ மணி 11
வேலைக்கு நேரமாச்சி..
கனவு கலைந்தபின்னும்.. கற்பனைகள் கலையவில்லை

எழுதியவர் : விநாயகபாரதி.மு (15-Apr-14, 8:17 pm)
பார்வை : 175

சிறந்த நகைச்சுவைகள்

மேலே