மறுப்பதேன் அன்புமானே

அடிக்கரும்பின் இனிப்பாய் பேசி
******அடிமனதை வருடியவளே ...!!

துடிதுடிக்கும் விழியால் மெல்ல
******நெஞ்சத்தை துளைத்தவளே .....!!

வடித்தசிலை போலும் பொலிவில்
******வண்ணத்தைக் குழைத்தவளே ....!!

கொடியிடை மடிப்பின் அழகால்
******கிரங்கிடச் செய்தவளே ....!!

விடியலில் புள்ளிக் கோலமிட்டு
******விழிவிருந்து படைத்தவளே .....!!

செடிதனில் அசையும் மலராய்
******சிரித்தே மயக்குபவளே .....!!

மடிதனில் ஓரிடம் கேட்க
******மறுப்பதேன் அன்புமானே .....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Apr-14, 8:42 pm)
பார்வை : 184

மேலே