ஜாதியாம் ஜாதி

நம்முள் நாம் பிரித்து வைத்திருந்தோம்
மேல் ஜாதி கீழ் ஜாதி என..
ஆனால் நம்மை ஆள வந்த ஆங்கிலேயனுக்கோ
நாம் மொத்தமும் கீழ் ஜாதி ஆகிபோனோம்...
தன் இனத்தை தானே அழிக்கும் வெறியை
மனிதனுக்கு கொடுத்தது இந்த ஜாதி...
"ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்ற பாரதி இன்னும்
பள்ளிகளில் இருக்கிறார் பார்வைக்காக மட்டும்..
இந்த மதம் பிடித்த ஜாதியை அழிக்க வரமாக நமக்கு
ஆண்டவன் கொடுத்தது நட்பும் காதலும்...
உலகம் தோன்றி 1370 கோடி ஆண்டுகளுக்கு பிறகு
இப்போது தான் இந்த விதை வெடிக்க ஆரம்பித்துள்ளது..
இது வேரூன்றி விழுதுவிடும் காலமும் வரும்...
மனிதர்களை மதம் இனம் மொழி என கூறுபோடும்
அந்நியர்களுக்கு ஒன்று கூற ஆசைபடுகிறேன்...
உலகின் முதல் குடிமக்கள் ஆதாம் ஏவாள் என்பது உண்மையானால் ....
நம் அனைவருக்கும் ஒரே தாய் தான். ஒரே தந்தை தான்...
நாம் அனைவரும் ஒரு வயிற்று சிசுக்கள் தான்...

ஓ!! ஜாதி வெறி பிடித்தவர்களே...
சக மனிதனை நேசிக்காத நீங்கள் மிருகங்கள் தாம்...

எழுதியவர் : வினோத் (16-Apr-14, 11:46 am)
சேர்த்தது : vinoth srinivasan
பார்வை : 79

மேலே