ஒரு வார்த்தை கூட இல்லாமல்

நான் அதை செய்திருக்க வேண்டும்...!!!

நான் அதை தவிர்த்திருக்க வேண்டும், காண இயலாதைபோல..
நான் உன்னைவிட்டு சென்றிருக்க வேண்டும், புரிந்துகொல்லாததைபோல..
நான் நடித்திருக்க வேண்டும், காதில்
விலாததைபோல..
இல்லையேல்
என் மனதையும் நான் கேட்டிருக்க கூடாது,
இதை
காதல் என்று சொன்ன போது...

ஒரு வார்த்தை கூட இல்லாமல் தெரியபடுதினாய்,
காதலை எனக்கு...
ஒரு வார்த்தை கூட இல்லாமல் தந்தாய்,
உன் காதலை எனக்கு...
அனால்,
உன் ஸ்பரிசத்தை அறிய செய்தபின், இவ்வாறு சென்றுவிட்டாய்...

ஒரு வார்த்தை கூட இல்லாமல் சென்றது,
காதல் என்னை விட்டு...
ஒரு வார்த்தை கூட இல்லாமல் எரிந்தது,
காதல் என்னை...
இனிநான் என்ன சொல்ல...?
என் உதடுகளும் ஆச்சர்யத்தில் மூழ்கியது,
ஒரு வார்த்தை கூட இல்லாததால்...

ஏன் இது,
இவ்வளவு காயப்படுத்துகிறது...?
ஏன் இது,
தொடர்ந்து காயப்படுத்துகிறது...?

இனி, உன்னை காண முடியாது
என்ற
உண்மையைத் தவிர,
நீ இங்கு இல்லை
என்றதாலும் தான்..
இல்லையேல்,
முன்பை போலவே இருந்திருப்பேன்
நான்...

ஒரு வார்த்தை கூட இல்லாமல் தீண்டியது,
கண்ணீர் என் கன்னங்களை...
ஒரு வார்த்தை கூட இல்லாமல் உடைந்து போனது, என் இதயம்...
ஒரு வார்த்தை கூட இல்லாமல், காத்திருந்தேன்
நான்...
ஒரு வார்த்தை கூட இல்லாமல், காயபடுத்தியது
காதல்..

நான் வெளியே(பொய்யான)உருவெடுத்தேன்...!!!

வானை பார்த்து அழுததால்,
"முட்டாள்"
என அழைக்கப்பட்டேன்..

ஒரு வார்த்தை கூட இல்லாமல், கண்டறிந்தது (காதல்)தீ...
ஒரு வார்த்தை கூட இல்லாமல், வந்தது
இந்த முடிவு...

என் இதயம் வியந்தது,
எந்தவித ஏற்பாடும் இன்றி
உன்னை அனுப்ப இருப்பதால்...
அதனால்தானோ,
கண்ணீராக வெளியே வந்தது,
ஒரு வார்த்தை கூட இல்லாமல்..

ஒரு வார்த்தை கூட இல்லாமல், காய்ச்சல்
வந்து சென்றதைப்போல..
ஒரு வார்த்தை கூட இல்லாமல், காதலும்
என்னிடம் வந்து சென்றது...

ஒருவேளை நான் செய்ய வேண்டியது எல்லாம் இந்த காயத்தை தாங்ககூடிய வலிமையை வளர்ப்பதுதான்போல..??

ஏனெனில்,
இறுதியில் மிஞ்சுவது
அதன் தழும்புகள் மட்டுமே....

எழுதியவர் : அஸ்லுனா (16-Apr-14, 12:58 pm)
சேர்த்தது : ASLUNA
பார்வை : 144

மேலே