நமது வேட்பாளர்
மக்களின் பணத்தை
வரி என்று விழுங்கிடும்
பூதங்கள் அரசியல் வாதி
+++++++++++++++++++++
எனக்கு பிடித்த
வண்ணக்கொடி
மக்களுக்கு வறுமை
கொடி கட்சி கொடி
+++++++++++++++++++++
ஊரெங்கும் விழாக்கோலம்
பட்டாசு வெடிசத்தம்
கோயில் திருவிழாவா இல்லை
கட்சிகளின் அலங்கோலம்
+++++++++++++++++++++
ஒருநாள் வருவார்
வாக்குறுதியும் கொடுப்பார்
மறுநாள் யார் என்று
கேட்டிடுவார் நமது வேட்பாளர்
++++++++++++++++++++