என்னை தூக்கிப் போட்ட பிரம்மன் என் அன்னை
எண்ணி எண்ணி
நாட்களை
நகர்த்தி இருப்பாய்,
என்று உன்கருவில்
என்னை குடிவைத்தாயோ?
அன்றிலிருந்து;;;
எனக்காய்
ஏக்கங்கள் பலதை
ஒதுக்கி இருப்பாய்,
என் மீது உனக்கு
கோபமே வந்ததில்லை
உன் உணவில் பத்து மாதம்
நான் பங்கிட்ட போதும்;
திரும்பிப்படுக்க வழியின்றி
பல இரவும் -வலியில்
பகலாய் போனது உனக்கு
அன்றும் பொருத்திருந்தாய்.
உன்னை
மிதித்தபோதெல்லாம்
என் பிஞ்சு கால்கள்
வலித்திருக்குமோ?என்று
உன் விரல்களாலே
வருடிக் கொடுத்தாய்,,,
என்னை சுமந்தபடியே
பெண்மையை பங்கிட்டு
பணிவிடைகள் செய்தாய்;
அன்றும் உனக்கு -நான்
சுமையாய் தெரியவில்லை.
இருவரும் ஒரு உயிராய்
இறுதிவரை
ஒன்றாய் இருந்தோமே?
நான் கருவறைவிட்டு
கண் விழித்தபோது
காணாமல் போனாயே!
அம்மா,,
உனக்கு நான்
தேவை இல்லையெனில்
தாயே!!!
என்னை உலகுக்கு
ஏன் அனுப்பினாய்?
உன் கருவறையில் நான்
பிறந்த போதே
என்னை கல்லறைக்குள்
புதைத்திருக்கலாமே???