யாமிதாஷாநிஷா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : யாமிதாஷாநிஷா |
இடம் | : நாகர்கோவில் |
பிறந்த தேதி | : 06-Jun-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 615 |
புள்ளி | : 93 |
நமக்கு எது நல்லதோ
அது மட்டுமே
நம்மிடம் வந்து சேரும்...
நம்புங்க...
நம்பிக்கை தாங்க
வாழ்க்கை...
என்றும் அன்புடன்
யாமிதாஷா...
நீ இறந்து போனதை மறந்து
நீ இருப்பதாய் நினைத்து,
அழைப்பதற்கு
அலைபேசியை எடுத்தேன்.
அழிக்க மறுத்த எண்களை
அடிக்கடி
அழுத்திவிட்டு
வைக்கிறேன்...
யாரோ
பேசினார்கள் "அம்மா"
நீ தொடர்புக்கு அப்பால்
போனதாய் கூறுவதற்கு...
************************************************
நீ சொல்லி முடியும் முன்
சொற்களை தேடுகிறேன்;
நம் சந்திப்பின் நேரம்
சற்று ,,,
நீடிக்கட்டுமே என்று...
மறுமொழி
கூறாவிட்டாலும்
பரவா இல்லை;
நீ மௌனமாய்
பேசினாலே போதும்...
யாமி...
எனக்காக நீ
மலர் பறித்து மலர் பறித்தே
பூமியில் மலர் இன்றி போனது,,,
இப்போது பார்,,,
உன்னால் பாதி பெண்களும்
மலர் சூடுவதையே
மறந்து போய்
தலைவிரி கோலமாய்
நடக்கின்றனர்...
யாமி...
அன்பாய் ரசித்து மென்மையாய்
வளர்த்த காதலை
நாளைடைவில்
வீண் விவாதங்களால்
கண்முன்னே சிதைந்து
போவதைக்கண்டு
வேதனை அடைவதை விட,,,
மௌனமாய் இருந்து
இருவரும் கடந்த
அழகிய நினைவுகளை
அசைபோடலாம்,,,
"காதல் அழகானது"...
யாமி...
உன் விரல் பட்டு
விழுவதாய் இருந்தால்
காய்ந்த சருகு கூட
எனக்கு
காதல் சின்னமே...
யாமி...
கொஞ்சித் திரிய
வேண்டாம்;
கொஞ்சம்
கனவுக்குள்ளாவது
வந்து போயேன்...
யாமி...
படைகளே இல்லாமல்
போர் தொடுக்கிறாய்;
பகல் இரவு பாராமல்
தேட வைக்கிறாய்,,,
யாருக்கும் அடங்காத
பிடாரி என்னை;
உன் விழிகளில்
தடுக்கி வீரமாய்
விழ வைத்தாய்
காதலில்...
யாமி ...