அம்மா

நீ இறந்து போனதை மறந்து





நீ இருப்பதாய் நினைத்து,
அழைப்பதற்கு
அலைபேசியை எடுத்தேன்.
அழிக்க மறுத்த எண்களை
அடிக்கடி
அழுத்திவிட்டு
வைக்கிறேன்...
யாரோ
பேசினார்கள் "அம்மா"
நீ தொடர்புக்கு அப்பால்
போனதாய் கூறுவதற்கு...


************************************************

எழுதியவர் : யாமிதாஷா (27-Jan-20, 12:00 pm)
சேர்த்தது : யாமிதாஷாநிஷா
Tanglish : amma
பார்வை : 1908

மேலே