கடவுள் எங்கே

தூண்ணிலும் துரும்பிலும் தேடி பார்த்து விட்டேன்
துன்பம் துடைக்கும் தூயவன் அங்கில்லை..!
ஆலயம் பல சென்று கண்டு விட்டேன்
அருள் தராது ஆண்டவன் கல்லாய் நிற்க மனம் நோந்தேன்..!
"பல கவலையை ஒரு கணத்தில் போக்கிடும்
பெரும் பலம் வாய்ந்த அந்த கடவுள் எங்கே"..?
இயற்கையை இறைவன் என்பார்
இரக்கமின்றி பல உயிர் கொல்லும்,சீற்றம் அவன் அருளோ..?
ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண் என்பார்
உணவுக்காக ஏங்கும் அவன்,இறைவன் ஆட்டி வைக்கும் பொம்மை பொருளோ..?
"துவண்டு விழும்போது துனை வந்து தூக்கும்
அன்பு கரம் கொண்ட அந்த கடவுள் எங்கே"..?
ஏடு பல சொல்கிறது அவன் பெருமையை..!
கதைகள் நூறு சொல்கிறது அவன் மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையை..!
ஏட்டுச்சுரக்காய், கறிக்கு உதவுவது இல்லை..!
கண்டதாக சொல்பவர் மேல் நம்பிக்கை இல்லை..1
"தோல்வியினை துறத்தி அடிக்கும் மனம் கொடுக்கும்
அந்த மாமன்னன்,கடவுள் எங்கே"..?
மடங்கள் பல சென்றேன் அந்த முதல்வனைத் தேடி..!
மகான் என்னும் போர்வைக்குள் மறைந்து வாழ்கின்றான்
பணப்பேய் பிடித்த அல்ப மானிடன் சிலப்பேர்
கேட்டதை கொடையாக கொடுபவர் கொடுப்பதல்..!
"அக்கிரமம் அழிக்கும் துணிவினைக் கொடுக்கும்
அந்த நாயகன்,கடவுள் எங்கே"..?
இக்கவிதை முடிவினை எழுதிட தெளிவின்றி தவித்தேன்..!
விழியில் நீரோடு "கடவுளே நீ எங்கே" என்று கண் மூடி கேட்டேன்..!
குவளையில் நீர் கொண்டு என்னை நோக்கி வந்தாள்..!
கண்ணீரை கரங்கலால் துடைத்து,அவள் தோளில்
என் சிரம் சாய்த்தாள்..!
கடவுள் இல்லை என்று எழுதிட வந்த கை
கடவுள் உண்டு என்று எழுதின அவளை பார்த்ததும்..!
ஆம்! ஈரைந்து மாதம் கருவில் சுமந்தவள்..!
இரு விழிகள் மூடும் வரை நெஞ்சில் சுமப்பவள்..!
தோல்வி வரும் போது தோள் கொடுப்பவள்..!
மெழுகினைப் போல தன்னை உருக்கி ஒளி கொடுப்பவள்..!
மலரினைப் போல பொன்முகம் கொண்டவள்..!
"அவள் தான் அன்னை..!
என் கடவுள் என் அருகில்"..!
------------கடவுள் இங்கே..!-----------
என் கடவுளுக்காக
ஜெய்