வார்த்தைகளால் திருமணம் கஸல்
இறைவா!
நீ
எந்தக் கதவைத் தட்டினாலும்
திறக்கிறாய்
நீ
அதிசய நிலவு
என் நினைவுகள்
உன்னில்
வளர்வதேயில்லை
நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட
தாலிக்கயிறு?