இழப்பு யாருக்கு
திங்கள் மும்மாரி
பொழிய மறந்ததேன் ...??
கதிரவன் காட்டமாய்
சுட்டெரித்துக் கொதிப்பதேன் ....??
ஓசோன் படலத்திலும்
ஓட்டை விழுந்ததேன் ....??
இறுகிய மலைகளும்
சீற்றமுடன் சரிவதேன் ....??
கரைபுரளும் நதிகளும்
காய்ந்தே போவதேன் .....??
சுகமான காற்றும்
சூறாவளியாய் அழிப்பதேன் ...??
நிலமகள் நடுங்கி
அதிர்ந்து பிளப்பதேன் .....??
எரிமலை ஆவேசமாய்
நெருப்பை உமிழ்வதேன் ....??
கட்டுக்கடங்கா காட்டாறு
வாரிசுருட்டிச் செல்வதேன் ....??
வனம்வாழ் உயிரினமும்
மெல்லமெல்ல அழிவதேன் .....??
சீறியெழும்பும் கடலலைகள்
ஊருக்குள் புகுவதேன் ....??
இயற்கை சினமுற்றால்
இழப்பு யாருக்கு ....???
சிந்திக்காமல் சிதைத்தால்
நாசம் நமக்கே .....!!