வளர்ச்சியின் மாற்றம் -- 1

முழு நிர்வாணம்
முகப்பில் வந்துவிடா
எண்ணம் கொண்டு
வந்து விட்ட
முக்கால் நிர்வாணத்தை
கிழித்துவிட்டு
வழி நடந்து போனால்..

கிழிந்து
கையில் சிக்கிய
காகிதமோ கசங்கி
புழுங்கியது...
வளர்ச்சியின் மாற்றத்தில்
மறைக்கப்பட்ட
குப்பை தொட்டியால்.......

எழுதியவர் : பாவூர் பாண்டி (17-Apr-14, 11:47 pm)
பார்வை : 91

மேலே