இரயில் பயணம்

முடிவில்லா தொலைவுகள்
அளவில்லா நினைவுகள்
அசைபோடும் பொழுதுகள்
கரைந்தோடும் நிமிடங்கள்
இரயிலின் ஓசையாய் தொடரும் உன் நினைவுகளோடு
புரியாத மனிதர்கள்
விந்தையானது தான் நானா? இரயில் பயணமா?
கேள்விகளுக்கிடையில் மின்னூட்டமற்ற கைப்பேசி
புரியாத பாஷை
புரிந்தும் புரியாமலும்
ஓயாது எண்ணங்களின் ஓசை
நீண்ட உறக்கம்
தீராத ஏக்கம்
விளங்காத உலகில்
புதிதாய் ஒரு பயணம்
இரு தண்டவாளங்களை இணைத்து தொடரும் நினைவுப் பயணம்
இது ஒரு இரயில் பயணம்

எழுதியவர் : ஸ்ரீ (18-Apr-14, 9:22 am)
சேர்த்தது : ஸ்ரீ
Tanglish : irayil payanam
பார்வை : 531

மேலே